Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கூகுளில் பாலின சமத்துவ பிரச்சினை; இழப்பீடு தொகையாக 118 மில்லியன் டாலர் அறிவிப்பு! நடந்தது என்ன?

    கூகுளில் பாலின சமத்துவ பிரச்சினை; இழப்பீடு தொகையாக 118 மில்லியன் டாலர் அறிவிப்பு! நடந்தது என்ன?

    “ஆண்களும் பெண்களும் சமம்” என்பது திரைப்படங்களில் மட்டுமே வரும் வெற்று வசனம் என்ற உணர்வை அவ்வபோது நமது சமூகத்திற்கு ஏதேனும் ஒரு நிகழ்வு எடுத்துரைத்த வண்ணமே உள்ளது.

    அவ்வகையில், பாலின சமத்துவத்தை முறையாக பின்பற்றாததால் கூகுள் நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில், 118 மில்லியன் டாலர் இழப்பீடு தொகை வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

    கடந்த சில வருடங்களாகவே, கூகுள் நிறுவனத்தின் மீது பல்வேறு வகையான வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாலின சமத்துவம், நிற வேற்றுமை தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில்தான், இந்த பாலின சமத்துவம் தொடர்பான வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    2017-ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில், கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர்கள் ஒன்றிணைந்து கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்தனர். அவ்வழக்கில், ஒரே பதவியில் இருக்கும் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுவதாகவும், பாலின பாகுபாடு சார்ந்து பொறுப்புகளை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

    பல தவணைகளாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கானது இறுதிவரை தீர்ப்பை எட்டவில்லை. இன்றளவும் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வழக்கில் கூகுள் நிறுவனத்தின் வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    அந்த அறிக்கையில், 2013ம் ஆண்டு செப்டம்பர் 14 முதல் 236 வெவ்வேறு பதவிகளில் கலிபோர்னியாவில் பணிபுரிந்த, பணிபுரியும் 15,500 பெண் ஊழியர்களுக்கு 118 மில்லியன் டாலர் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், எங்கள் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் சமத்துவத்தை உறுதியாக நம்புகிறோம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய ஐந்து வருடமாக நடைபெற்ற இந்த வழக்கில் இருதரப்பிலும் எந்தவொரு ஆதாரங்களும், தகவல்களும் கிடைக்கவில்லை எனவும், ஆதலால் இந்த விஷயத்தைத் தீர்த்து வைப்பது அனைவருக்கும் நல்லது எனவும் அந்நிறுவனம் தெரவித்துள்ளது.

    15,500 பெண் ஊழியர்களுக்கு 118 மில்லியன் டாலர் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்ற இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட இந்த ஒப்பந்தம்  மகிழ்ச்சியை தந்துள்ளது என்று கூகுள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

    இதன்மூலம், சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட கூகுள் நிறுவனத்தின் மீதான பாலின சமத்துவ தொடர்பான வழக்கானது திரும்பப்பெறப்படும் என்று தெரிகிறது. 

    ‘பத்தல பத்தல’ கமல்ஹாசனின் இந்த ‘சாகாத’ முகம் உங்களுக்குத் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....