Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்சுயமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு 'குட் நியூஸ் '! வரும் 30-ஆம் தேதி தொழில் முனைவோர்க்கான...

    சுயமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு ‘குட் நியூஸ் ‘! வரும் 30-ஆம் தேதி தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்..

    சென்னையில் 30.11.2022 அன்று தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைப்பெறவுள்ளது.

    மேற்கண்ட முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

    முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும்.

    பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.

    அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது. இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

    குறிப்பு:- மேலே உள்ள தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு ஆர்வமுள்ள நபர்களுக்கு பயன் பெற வழிவகை ஏற்படுத்தி தரப்படும்.

    மேலும் விவரங்களுக்கு:

    தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் எண்: 044-22252081, 22252082, 96771 52265, 9444556099.

    வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்களுகாக வருகிறது புதிய மொபைல் ஆப்: அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....