Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அவைக்குள்ளே வாருங்கள்.. ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்தலாம்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அழைப்பு

    அவைக்குள்ளே வாருங்கள்.. ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்தலாம்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அழைப்பு

    தொழிலதிபர் அதானிக்கு சாதகமாக பிரதமர் மோடி அரசு செயல்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்படும் எல்லா திட்டங்களும் பொதுவெளியில் டெண்டர் விடப்பட்டுதான் நிறைவேற்றப்படுவதாகவும் அதானிக்கு சாதகமாக தாங்கள் செயல்படவில்லை எனவும், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தான் கபட நாடகம் போடுவதாகவும் தெரிவித்துள்ளார். 

    ஒருபக்கம் போராட்டம் நடத்துகிறார்கள் எனவும், மறுபக்கம் அவர்களே ஆளும் மாநிலங்களில் அதே நிறுவனம் துறைமுகம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற நிலம் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். 

    தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமாக விவாதம் நடத்தாமல் வெளியே போராட்டம் நடத்தியும், தவறான கருத்துகளையும் முன்வைத்து வருவதாகவும், தாங்கள் இந்த விவகாரத்தில் எதையும் மூடி மறைக்கவில்லை எனவும் தெரிவித்தார். 

    அதோடு, “அவைக்குள்ளே வாருங்கள்; ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்தலாம்; பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்புதான். நாட்டின் பொருளாதாரக் கொள்கை மிக வலுவாக உள்ளது. இதனால் அதற்கு எந்தப் பாதிப்பும் இல்லை” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

    ஓய்வு பெற்றார் ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....