Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!

    கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. 

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா நாளை (ஆகஸ்ட் 31) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    கோயம்பேடு சந்தையில் மல்லிகை கிலோ 800 ரூபாய்க்கும், முல்லை கிலோ 500 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 150 ரூபாய்க்கும், ரோஜா கிலோ 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

    இந்த விலை உயர்வினால் பொதுமக்கள் குறைவான பூக்களையே வாங்கி செல்கின்றனர். இந்த விலை உயர்வு இன்னும் சில நாள்கள் நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    அதேபோல், சென்னையின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை வாங்கும் ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. மேலும், புதுவிதமான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டிருப்பது குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    பெண்கள் இருக்கும் வரலட்சுமி விரதமும் அதன் பலன்களும்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....