Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்"வீடு வீடா தேசியக்கொடி ஏத்த சொன்னீங்க”– தேசியக் கொடியை வாங்க மறுத்த அமித்ஷாவின் மகன்..

    “வீடு வீடா தேசியக்கொடி ஏத்த சொன்னீங்க”– தேசியக் கொடியை வாங்க மறுத்த அமித்ஷாவின் மகன்..

    நடப்பு ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் (ஆகஸ்ட் 28) இரவு நடைபெற்றது. உலகக் கோப்பை டி20 ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி தரும் வகையில் ஆசிய கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்தது.

    இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த ரசிகர்களும், போட்டியை டெலிவிஷனில் பார்த்த ரசிகர்களும் கொண்டாடினார்கள். இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் காண வேண்டும் என்று ஏராளமான ரசிகர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், பிசிசிஐ நிர்வாகிகள், ஐக்கிய அரபு அமீரக ஷேக்குகள் மைதானத்தில் குவிந்தனர்.

    பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும், போட்டியை காண துபாய் மைதானம் வந்தார். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பின் ரசிகர்களும், பிசிசிஐ நிர்வாகிகளும் உற்சாகத்தில் இருந்தனர். அப்போது ஜெய் ஷாவிடம் அருகில் இருந்த நபர் இந்திய தேசியக் கொடியை கொடுத்துள்ளார்.

    ஆனால் அவர் அதை வாங்க மறுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த செயலை வேறு யாரவது செய்திருந்தால் பாஜகவினர் அவரை தேசத்துரோகி என கூறியிருப்பார்கள். அமித்ஷா வின் மகன் என்பதால் சைலண்டாக உள்ளனர் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். இது தொடர்பாக ஜெய்ஷாவை பலரும் விமர்சனம் செய்கிறார்கள். மேலும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி செயற்குழு கட்சியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளராக உள்ள ஒய்.சதீஷ் ரெட்டி இன்னும் ஒருபடி மேலே சென்று ஆர்எஸ்எஸ் முன்னோர்களின் அடிச்சுவடு என்று ஜெய் ஷாவை விமர்சித்தார்.

    இந்திய தேசியக் கொடிக்கு ஆர்எஸ்எஸ் முன்னுரிமை அளிப்பதில்லை என்றார். மோகன் குமாரமங்கலமும் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளனர். இதே வீடியோவை மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்துள்ளது. உள்துறை மந்திரியின் மகன் தேசிய கொடியை வாங்க மறுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

    “மூவர்ணக் கொடியிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளும் அவர்களின் பழக்கம் பல தலைமுறைகளாக உள்ளது அது எப்படிப் போகும்?” என காங்கிரஸ் விமர்சித்து உள்ளது. மறுபுறம், பாஜக ஆதரவாளர்களின் வாதம் வேறு.

    இந்திய கிரிக்கெட் கவுன்சில் செயலாளராக இருந்திருந்தால் ஜெய் ஷா தேசியக் கொடியை ஏற்றியிருப்பார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார். எனவே அவர் ஆசிய நாடுகளுக்கு பொதுவானவர்.

    ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் அவர் எப்படி இந்திய தேசியக் கொடியை பிடிக்க முடியும்? இது நடுநிலையான கேள்வி என்கிறார்கள். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்ற முறையில் இந்தியாவுக்காக அல்ல, எல்லா போட்டிக்கும் ஜெய் ஷா கைதட்டினார் என்றும் கூறுகிறார்கள்.

    இங்கிலாந்து இளவரசி டயனா பயன்படுத்திய காரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....