Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகூகுள் மேப் பார்த்தபடி சென்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பம் 

    கூகுள் மேப் பார்த்தபடி சென்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பம் 

    கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டுள்ளனர். 

    கர்நாடக மாநிலம் சர்ஜா பூரைப் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் ஓசூர் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் சொந்த ஊருக்கு நேற்றிரவு திரும்பியுள்ளார். அப்போது கூகுள் மேப் பார்த்தபடி காரை ஓட்டியுள்ளார். 

    அப்படி, கூகுள் மேப்பை பார்த்தபடி காரை ஓட்டிய ராஜேஷ் பேக்கப்பள்ளி என்ற பகுதியை கடந்தார். அப்போது மழையால் அப்பகுதியில் இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியிருந்தது தெரியாமல், காரை தரைப்பாலத்திற்குள் இறங்கியுள்ளார். இதன்காரணமாக, கார் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது.

    இதனிடையே அவர், தனது கைப்பேசி மூலம் காவல்துறையின் அவசர உதவியை நாடியுள்ளார். இதைத்தொடர்ந்து, காவல்துறையும் தீயணைப்பு துறையும் ராஜேஷ் உள்ளிட்ட நான்கு பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்.

    ஒரு வருடத்துக்குப் பிறகு திரையரங்குகள் திறக்க அனுமதித்த தலிபான்கள்.. மகிழ்ச்சி தான் ஆனால்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....