Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதயிர் பாக்கெட்டில் இந்தி கட்டாயம் என்று அறிவிப்பை திரும்பப்பெற்ற உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம்

    தயிர் பாக்கெட்டில் இந்தி கட்டாயம் என்று அறிவிப்பை திரும்பப்பெற்ற உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம்

    தயிர் பாக்கெட்டில் இந்தி கட்டாயம் என்று அறிவிப்பை இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் திரும்பப்பெற்றது. 

    தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என்ற இந்தி வார்த்தை கட்டாயம் இடம்பெற வேண்டும் என இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்புக்கு தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 

    அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தை இடைபெறாது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். மேலும் இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்வரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வந்தனர். 

    இந்நிலையில், தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தை இடம் பெற வேண்டும் என்ற அறிவிப்பினை இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. மேலும் ஆங்கில வார்த்தையுடன் உள்ளூர் மொழியை அடைப்பு குறிக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கிணறுகளில் உள்ள குடிநீரில் தீ பற்றி எரிவதால் பொதுமக்கள் அதிர்ச்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....