Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகிணறுகளில் உள்ள குடிநீரில் தீ பற்றி எரிவதால் பொதுமக்கள் அதிர்ச்சி

    கிணறுகளில் உள்ள குடிநீரில் தீ பற்றி எரிவதால் பொதுமக்கள் அதிர்ச்சி

    கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் கிணறுகளில் உள்ள குடிநீரில் தீ பற்றி எரிவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சாலுமூட்டு பகுதியில் உள்ள 60 க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீர் கிணறுகளில் உள்ள தண்ணீரில் தீ பற்றி எரியும் அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

    அஞ்சாலுமூட்டு பகுதியில் ஸவர்ணம்மா என்பவரது வீட்டில் கிணற்று தண்ணீரில் திடீரென தீப்பிடித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்ற அப்பகுதியில் உள்ள 60 க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். 

    இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அருகில் உள்ள பெட்ரோல் கசிவு ஏதும் நிகழ்ந்துள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடடையே பொதுமக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். 

    பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தொடரின் இடையே ஆபாச படம் பார்க்கும் காணொளி வைரல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....