Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஉத்தரபிரதேசம்: இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

    உத்தரபிரதேசம்: இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

    உத்தர பிரதேசத்தில் சுல்தான்பூர் ரயில் நிலையத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பெட்டிகள் தடம் புரண்டன. 

    உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூர் ரயில் நிலையம் அருகே 2  சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் இரண்டு ரயில்களும் பலத்த சேதமடைந்தன. 

    இந்த இரண்டு சரக்கு ரயில்களின் ஓட்டுநர்களும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    இந்த விபத்தை அடுத்து வாரணாசி-லக்னோ மற்றும் அயோத்தி-பிரயாக்ராஜ் ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். தடம் புரண்ட பெட்டிகளை ஜேசிபி மூலமாக தண்டவாளத்தில் இருந்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

    இந்த விபத்துக்குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விபத்து காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு, சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

    ‘இனிமேல் இந்த பெயரை மக்கள் யாரும் வைக்க கூடாது’ – வடகொரியாவில் புது விதி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....