Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலகக் கோப்பை கால்பந்து; இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ்..

    உலகக் கோப்பை கால்பந்து; இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரான்ஸ்..

    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது. 

    கத்தாரில், நடப்பாண்டிற்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகள் என மொத்தம் 32 அணிகளுடன் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கிய, இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

    இந்த உலகக் கோப்பை தொடரின் முதலில் குரூப் ஆட்டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, நாக்-அவுட் சுற்றுகளும், காலிறுதியும் நடைபெற்றன. இந்நிலையில், தற்போது அரையிறுதிச் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. 

    ஏற்கனவே நடைபெற்ற அரையிறுதி ஒன்றில் குரோஷியா அணியை வீழ்த்தி, மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி இறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்றது. இந்நிலையில், கால்பந்து உலகக் கோப்பையின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி, முதன் முறையாக அரையிறுதி வந்த மொராக்கோ அணியுடன் மோதியது.

    இந்த ஆட்டம் தொடங்கிய முதலே விறுவிறுப்பான கோணத்தில்தான் நகர்ந்துக்கொண்டிருந்தது. ஆட்டத்தின் 5-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணியை சேர்ந்த தியோ ஹெர்னாண்டஸ் முதல் கோலடித்து தன் அணியை முன்னிலைப் படுத்தினார். முதல் பாதி வரை ஒரு கோல் கூட மொராக்கோ அடிக்கவில்லை. 

    இதனால், 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் முன்னிலை வகித்தது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதியில், 79-ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக வந்த கோலோ முஹனி பிரான்ஸுக்காக கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து போராடிய மொராக்கோ இறுதி வரை ஒரு கோலும் அடிக்காமல், 2-0 என்ற கணக்கில் பிரான்ஸிடம் விழுந்தது. இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது. 

    வருகிற ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுடன் பிரான்ஸ் விளையாடவுள்ளது. 

    இந்த ஆண்டின் பிரபலமான இந்திய தொடர்கள் எவை? – வெளிவந்த ரிப்போர்ட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....