Sunday, March 17, 2024
மேலும்
    Homeவானிலைஅரபிக் கடலில் வலுவடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

    அரபிக் கடலில் வலுவடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

    தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலை ஒட்டிய பகுதிகளில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலில் நிலைக் கொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில், அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு இருப்பதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு வங்காள விரிகுடாவில் 17 டிசம்பர் வரை அதன் தீவிரத்தை தக்க வைத்து கொள்ளும். இதன் காரணமாக வரும் 19ஆம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இதனிடையே தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டின் பிரபலமான இந்திய தொடர்கள் எவை? – வெளிவந்த ரிப்போர்ட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....