Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

    முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

    மதுரை தனியார் மருத்துவமனையில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். 

    சேடப்பட்டி முத்தையா 1977, 1980, 1984, 1991 ஆகிய ஆண்டுகளில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 

    அதைத்தொடர்ந்து, சேடப்பட்டி முத்தையா 1991 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டமன்றத் தலைவராக பதவி வகித்தார். 

    சேடப்பட்டி முத்தையா நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவியில் இருந்தார். 

    இதையடுத்து, அதிமுகவில் இருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா, திமுகவில் இணைத்து பணியாற்றத் தொடங்கினார். திமுகவில் இணைந்ததும் இவர் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றி வந்தார். 

    இதுமட்டுமின்றி சேடப்பட்டி முத்தையா, பெரியகுளம் தொகுதியில் வெற்றி பெற்று, வாஜ்பாய் அரசில் கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

    மூத்த அரசியல் வாதியும் முன்னாள் சபாநாயகருமான சேடப்பட்டி முத்தையா (வயது 76) மதுரை, திருமங்கலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 21) சிகிச்சை பலனின்றி காலமானார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....