Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக எம்.பி மஸ்தான் கொலை வழக்கு; அவரது சகோதரனை கைது செய்த காவல்துறை..

    திமுக எம்.பி மஸ்தான் கொலை வழக்கு; அவரது சகோதரனை கைது செய்த காவல்துறை..

    முன்னாள் எம்.பியும், சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் டாக்டர் மஸ்தான். இவருக்கு வயது 66. இவர் குடும்பத்துடன் சென்னை சேப்பாக்கத்தில் வசித்து வந்தார். 

    இவரது மகனின் திருமண நிச்சயதார்த்தம் கோலகலமான முறையில் நடைபெற இருந்தது. அதற்காக முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கும் பணியில் மஸ்தான் பிஸியாக இருந்தார். 

    இதன் ஒருபகுதியாக, கடந்த 22-ஆம் தேதி இரவு பிரமுகர்களுக்கு அழைப்பு கொடுத்து விட்டு விடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, ஊரப்பாக்கம் அருகே கார் வந்த நிலையில், மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஆனால், மஸ்தான் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மஸ்தானின் மகன் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து. காவல்துறை விசாரணை மேற்கொண்டர். 

    இந்த விசாரணையில் மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக அவரின் உறவினர்கள் 5 பேரை காவல்துறை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், காரை ஓட்டிச்சென்றவரான இம்ரான் பாஷா தனது கூட்டாளிகளுடன் ஒன்று சேர்ந்து காரை ஓரிடத்தில் நிறுத்தி திட்டமிட்டே மஸ்தானுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தி கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகின. 

    இந்நிலையில், மஸ்தான் கொலை வழக்கில் அவரது சகோதரர் ஆதம்பாஷாவை காவல்துறை தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மஸ்தான் திமுகவின் முன்னாள் எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது. 

    வலையில் சிக்கிய 3 கிலோ கல் நண்டு; வயிற்றில் முட்டைகள் இருந்ததால் நடவடிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....