Tuesday, May 16, 2023
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்'தற்கொலைகள் நிகழ்ந்துக் கொண்டிருக்க திமுக எந்தவிதமான முயற்சியினையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது' - இபிஎஸ் கருத்து!

  ‘தற்கொலைகள் நிகழ்ந்துக் கொண்டிருக்க திமுக எந்தவிதமான முயற்சியினையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது’ – இபிஎஸ் கருத்து!

  ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தினை அறிமுகப்படுத்தி, தற்கால இளைஞர்களை ஒரு நாசகார கூட்டம் சீரழித்து வருகின்றன என்றும், சைபர் குற்றவாளிகளை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

  ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தின் மூலம் தமிழகத்தில் இளைஞர்கள் பணம் சம்பாதிக்கும் ஆசையில் லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர் என்றும், பண இழப்பை தாங்க முடியாத சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் சில நாட்களுக்கு முன்பு அதிமுகவினால் அறிக்கை வெளியிடப்பட்டது. 

  இந்நிலையில் மேற்கூறியவற்றை சுட்டிக்காட்டி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ‘மாண்புமிகு அம்மாவின் அரசு தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து, சென்ற 2020 ஆண்டு, நவம்பர் மாதம் ஒரு அவசர சட்டத்தைப் பிறப்பித்து, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடைசெய்யப்பட்டது.

  இச்சட்டத்திற்கு உயர்ந்திமன்ற மதுரை கிளை நவம்பர் 2020ம் ஆண்டு தனது பாராட்டை தெரிவித்தது. இச்சட்டம் கோடிக்கணக்கான குடும்பத் தலைவிகள், பெற்றோர் வயிற்றில் பால் வார்த்தது’ என்று குறிப்பிட்டார், எடப்பாடி பழனிச்சாமி.

  மேலும், இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெரிய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர,  இவ்வழக்கு உயர்நீதி மன்றத்தில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் விசாரணைக்கு வந்த பொழுது தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றதால் இவ்வழக்கு ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

  பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், மூத்த வழக்கறிஞர்களை அரசின் சார்பாக நியமித்து வாதங்களை எடுத்துரைக்காததால், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம், 3.8.2021 அன்று ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுக்கு எதிராக அம்மாவின் அரசால் இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்தது என்பதையும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

  ஆன்லைன் ரம்மியை தடுப்பதற்காக இந்த அரசு உடனடியாக புதிய சட்டம் கொண்டுவரும் வரை, சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இடைக்கால தடை பெறவேண்டும் என்று இந்த தி.மு.க அரசை வற்புருத்தி அதிமுக சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட, அதற்கு மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர், சட்ட வல்லுநர்களை கலந்து, உடனடியாக புதிய சட்டம் இயற்றப்படும் என்று கடந்த ஆண்டு எங்களது அறிக்கைக்கு பதிலளித்த நிகழ்வை எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் நினைவுக் கூர்ந்தார். 

  அதோடு “இதுவரை ஆன்லைன் ரம்மி விளையாட்டு தமிழகத்தில் நடத்தக்கூடாது என்ற எந்த புதிய சட்டமும் பிறப்பிக்கப்படவில்லை. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வந்த நிலையில், இந்த அரசு உச்சநீதிமன்றத்தில் 13.11.2021 அன்றுதான் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

  100 நாட்களுக்கு மேல் ஆகியும், இதுவரை இந்த வழக்கை நடத்துவதற்கு இந்த அரசு எந்தவிதமான முயற்சியினையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது வருத்தமளிக்கிறது” என்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்தார். 

  தமிழ்நாட்டில் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டினால், தங்களது பணத்தையும், வாழ்வையும் இழந்து, மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிலேயே தவறான வழிமுறையில் ஈடுபட்டனர் என்றும், ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டனர் என்று ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளதை குறிப்பிட்டார். 

  மூத்த சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து, அப்பாவி இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி போன்ற பணம் வைத்து மெய்நிகர் (வெர்சுவல் மோட்) முறையில் அல்லது சைபர்ஸ்பேசில் நடத்தப்படும் விளையாட்டுகளில் ஈடுபட்டு தங்களது பணத்தை இழந்து, வாழ்க்கையை இழந்து, ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சூழ்நிலையிலிருந்து காக்க தேவையான சட்டத்தினை காலம் தாழ்த்தாது, உடனடியாக இயற்ற வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. 

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....