Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஸ்விஸ் ஓபன் 2022 : இந்திய அணிகளுக்கு கிடைத்த அதிர்ச்சி முடிவுகள்!

    ஸ்விஸ் ஓபன் 2022 : இந்திய அணிகளுக்கு கிடைத்த அதிர்ச்சி முடிவுகள்!

    2022ஆம் ஆண்டுக்கான சுவிஸ் ஓபனில் இந்தியாவின் சார்பாக ஒற்றையர் பிரிவில் 7 பேரும், இரட்டையைர் பிரிவில் 4 இணைகளும் 2வது சுற்றுக்கு முன்னேறின. கலப்பு இரட்டையரில் அனைவரும் தோல்வியுற்று ஏமாற்றம் அளித்தனர்.

    சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பசேல் நகரில் 2022ஆம் ஆண்டுக்கான சுவிஸ் ஓபன் பேட்மின்டன் தொடர் மார்ச் 22ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், அதில் தகுதி பெற்றவர்கள் நேற்று முதல் சுற்று ஆட்டங்களில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் இரட்டை ஒலிம்பிக் சாம்பியன் பி.வி.சிந்து, லண்டன் ஒலிம்பிக் சாம்பியன் சாய்னா நேவால், உலகின் முன்னாள் நம்பர் 1 வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், இந்திய ஓபனில் பட்டம் வென்ற சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ரெட்டி இணை ஆகியோரின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 

    இதன்படி நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மூத்த வீரரான தரவரிசையில் 37வது இடத்தில் பாருபள்ளி காஷ்யப், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 18 வயது இளம் வீரரும், தரவரிசையில் 266வது இடத்தில் இருக்கும் இனோகட் ராயை எதிர்கொண்டார். மிக எளிதாக ஆட்டத்தை முடித்த காஷ்யப் 21-17, 21-9 என்ற நேர்செட்களில் இனோகட் ராயைத் தோற்கடித்தார். 

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 19வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சாய் பிரனீத் மற்றும் தரவரிசையில் 26வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் மற்றொரு வீரரான ஹெச்.எஸ்.ப்ரனாயை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் சாய் பிரனீத் 25-23, 21-16 என்ற செட் கணக்கில் ஹெச்.எஸ்.ப்ரனாயை தோற்கடித்தார். 

    இந்தியாவின் 27வது ரேங்க் வீரரான சமீர் வெர்மா தன்னுடைய முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸின் 66வது நிலை வீரரான லூகாஸ் க்ளேர்பௌட்டை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் எளிதாக 18-21, 21-15, 21-11 என்ற செட் கணக்கில் சமீர் வெர்மா வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். 

    மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் டென்மார்க்கின் 75ஆம் நிலை வீரர் மேட்ஸ் கிரிஸ்டோபெர்சன், இந்தியாவின் ஆடவர் நம்பிக்கை நட்சத்திரம் உலகத் தரவரிசையில் 7வது இருக்கும் கிடாம்பி ஸ்ரீகாந்த்தை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 21-16, 21-17 என்ற நேர்செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார். 

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 53ஆம் நிலை வீராங்கனை லியோனிஸ் ஹூயேட்டை, இந்தியாவின் 62ஆம் நிலை வீராங்கனை அஷ்மிதா சலிகா 19-21, 21-10, 21-11 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். 

    இந்தியாவின் 23ஆம் நிலை வீராங்கனை சாய்னா நேவால், பிரான்ஸின் 67ஆம் நிலை வீராங்கனை யாலே ஹுவாயேக்ஸை 21-8, 21-13 என மிக எளிதாக தோற்கடித்து முன்னேறினார். மற்றொரு வீராங்கனையான உலகின் 2ஆம் நிலையில் இருக்கும் பி.வி.சிந்து, டென்மார்க்கின் 32ஆம் நிலை வீராங்கனை லைன் ஹோஜ்மார்க் க்ஜேர்ஸ்பெல்ட்டை 21-14, 21-12 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வென்றெடுத்தார். 

    இதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ரெட்டி இணை, இஷான் பட்நாகர் மற்றும் சாய் ப்ரதீக்.கே இணை மற்றும் பொக்கா நவநீத் மற்றும் ரெட்டி பி.சுமித் இணைகளும் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா மற்றும் ரெட்டி என்.சிக்கி இணை மட்டும் வெற்றி பெற்றது. 

    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பாக 6 இணைகள் களமிறங்கியபோதும், ஒருவர் கூட வெற்றி பெறாமல்  அனைவரும் தங்கள் முதல் சுற்றுகளிலேயே வெளியேறி அனைவருக்கும் ஏமாற்றம் அளித்தனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....