Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஅறிவியல்வானிலை அறிக்கையில் இதையெல்லாம் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? வியப்பூட்டும் தகவல்கள் உள்ளே!

    வானிலை அறிக்கையில் இதையெல்லாம் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? வியப்பூட்டும் தகவல்கள் உள்ளே!

    நாம் பலமுறை வானிலைச் செய்திகளைப் பார்த்திருப்போம். அவ்வாறு பார்த்தலின் போது வானிலை அறிக்கையில் அனைத்து மாவட்டங்களின் பெயரையும் சொல்லாது வெறுமனே வட தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என்பர். 

    ஆனால், வட தமிழக மாவட்டங்கள் என்று எந்தெந்த மாவட்டங்களை குறிப்பிடுகிறார்கள் என்று நமக்கு தெரியாமல் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

    அதேப்போல் வானிலை அறிக்கையில் பெரும்பாலான, அநேக வார்த்தைகளை உபயோகிப்பதற்கும் காரணங்கள் உள்ளன. அப்படியான வானிலை அறிக்கையில் தெரியாத சிலவற்றை தெரிவிக்கவே இக்கட்டுரை! 

    வட தமிழக மாவட்டங்கள் – சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,  சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர்.

    தென் தமிழக மாவட்டங்கள் – ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை , விருதுநகர், திண்டுக்கல், மதுரை.

    உள் தமிழக மாவட்டங்கள் –  வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை , விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, கள்ளக்குறிச்சி.

    வட உள் தமிழக மாவட்டங்கள் – வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர். 

    தென் உள் தமிழக மாவட்டங்கள் – சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி. 

    கடலோர தமிழக மாவட்டங்கள் –  சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், மாவட்டங்கள் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி. 

    வட கடலோர தமிழக மாவட்டங்கள் – சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை.

    தென் கடலோர தமிழக மாவட்டங்கள் – ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி 

    டெல்டா மாவட்டங்கள் –  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை 

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் – நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மாவட்டங்கள்.

    மேற்கூறிய மாவட்டங்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்கிறது என்பதை வைத்தே வானிலை அறிக்கையின் போது ‘பெரும்பாலான, அநேக’ போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. 

    ஆம்! தெளிவாக கூற வேண்டும் என்றால், மேற்கூறிய மாவட்டங்களின் எண்ணிக்கையில் 76 விழுக்காடில் இருந்து 100 விழுக்காடு வரையான இடங்களில் மழைப் பொழிய வாய்ப்பிருக்கிறது எனில், அப்போது வானிலை அறிக்கையில் பெரும்பாலான இடங்களில் மழைப் பெய்யும் என்பர்.

    அதேப்போல், 51 விழுக்காடில் இருந்து 75 விழுக்காடு வரையான இடங்களில் மழைப் பொழிய வாய்ப்பிருக்கிறது எனில், அப்போது வானிலை அறிக்கையில் அநேக இடங்களில் மழைப் பெய்யும் என்பர்.

    இதன் முறையே 26 விழுக்காடில் இருந்து 50 விழுக்காடு வரை மழைப் பொழியுமாயின் அவற்றை ஒரு சில பகுதிகளில் என்றும், 1 விழுக்காடு முதல் 25 விழுக்காடு வரையில் மழைப் பொழியுமாயின் அவற்றை ஓரிரு பகுதிகள் என்றும், மழைப் பொழிவு இல்லையெனில் வறண்ட வானிலை என்றும் கூறுவர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....