Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு மெஸ்ஸி எடுத்த அதிரடி முடிவு..

    உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு மெஸ்ஸி எடுத்த அதிரடி முடிவு..

    உலக சாம்பியனாக இன்னும் சில ஆட்டங்களில் விளையாட விரும்புகிறேன் என கால்பந்து வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். 

    கத்தாரில், நடந்து வந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது நேற்றுடன் முடிவடைந்தது. இப்போட்டியின் ஆரம்பத்தில், தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகள் என மொத்தம் 32 அணிகளுடன் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 18-ஆம் தேதியான நேற்று முடிவடைந்தது. 

    நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாத அளவு இந்த இறுதிப்போட்டியானது இருந்தது.

    இரு அணியினரும் திரும்ப விளையாட, இறுதியில் பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 என்ற கணக்கில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றிப்பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது. 

    உலக அளவில் பிரபலமான கால்பந்து வீரர் மெஸ்ஸி ‘ இதுவே என்னுடைய இறுதி உலகக் கோப்பைப் போட்டி’ என சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். 

    இவரின் இந்த அறிவிப்பால், உலகக் கோப்பைப் போட்டியுடன் சர்வதேசப் போட்டிகளில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெறுவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. 

    இந்நிலையில், மெஸ்ஸி இது குறித்து அர்ஜென்டினாவின் வெற்றிக்குப் பிறகு தெரிவிக்கையில், உலக சாம்பியனாக இன்னும் சில ஆட்டங்களில் விளையாட விரும்புகிறேன். என் வாழ்க்கையில் உலகக் கோப்பையைத் தவிர எல்லாப் போட்டிகளையும் வென்றது என் அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ளார். 

    மேலும், இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினாவுக்கு எடுத்துச் சென்று அனைவர் முன்னிலையிலும் என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தப் போகிறேன் என்றும் மெஸ்ஸி தெரிவித்தார். 

    ‘வரலாற்றில் மிகச்சிறந்த இறுதிப்போட்டி…’ – உலகக் கோப்பை கால்பந்து குறித்து மு.க.ஸ்டாலின் ட்வீட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....