Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

    குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக குற்றாலம் பிரதான அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கடந்த மாதம் 30 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 

    இதைத்தொடர்ந்து அருவிகளில் நீர்வரத்து சீரானதையடுத்து கடந்த வாரம் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதே சமயம், பிரதான அருவியில் நீர்வரத்து சீரானதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

    இந்நிலையில், தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழைபெய்து வருகிறது. இதனால், மீண்டும் குற்றால பிரதான அருவியில்  திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஐந்தருவியில் மிதமான அளவில் நீர்வரத்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதிக்கப்பட்டனர். 

    தமிழகத்தை சுனாமி தாக்கி 18-ஆண்டுகள் நிறைவு; கடலில் பால் ஊற்றி மக்கள் அஞ்சலி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....