Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுறும்படத் திருவிழா நடத்தி அசத்தும் இந்திய ராணுவம்! எதற்கு தெரியுமா?

    குறும்படத் திருவிழா நடத்தி அசத்தும் இந்திய ராணுவம்! எதற்கு தெரியுமா?

    ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் முதல் முறையாக இந்திய ராணுவம் சார்பில் குறும்படத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    எல்லை பாதுகாப்பு பணிக்காக மட்டுமின்றி, ஜம்மு காஷ்மீர் மக்களின் திரையுலக திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இந்தக் குறும்படத் திருவிழாவை நடத்த இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இந்த குறும்படத் திருவிழாவுக்கு ‘தில் மாங்கோ மோர்’ என பெயரிடப்பட்டுள்ளது. 

    ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், இந்திய ராணுவத்தின் தலைவர் ராகுல் பலி அவர்களின் யோசனையின் படி ‘தில் மாங்கோ மோர் திட்டம்’ உருவாக்கப்பட்டது.

    போட்டியின் விதிமுறைகளாக, டிசம்பர் 10 தேதிக்குள் 5 முதல் 15 நிமிடங்கள் கொண்ட குறும்படங்களை ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆன்லைன் மூலமாக அனுப்ப வேண்டும்.  இந்தத் திருவிழாவில் முடிவில், முதல் பரிசு பெறும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் பிரபல இயக்குநர்களிடம் வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்ளலாம் என்வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தத் திருவிழாவின் கடைசி நாளில் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. ஜம்முவில் மிகச் சமீபத்தில் தான் மல்டிப்ளெக்ஸ் சினிமா திரையரங்கு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    தடுமாற்றத்தின் போது குறுக்கீட்ட மழை; தொடரைக் கைப்பற்றியது இந்தியா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....