Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு‘கடைசில நடந்திடுச்சி’…இந்த இருபது ஓவர் உலகக் கோப்பையில் நடந்த சாதனை

    ‘கடைசில நடந்திடுச்சி’…இந்த இருபது ஓவர் உலகக் கோப்பையில் நடந்த சாதனை

    தென்னாப்பிரிக்காவின் ரில்லி ரூசோவ் 2022 இருபது ஓவர் உலகக் கோப்பையின் முதல் சதத்தை அடித்து சாதனை படைத்துள்ளார். 

    இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம் போன்ற 8 அணிகள் ஏற்கனவே சூப்பர்-12 சுற்றுக்கு தகுதிப்பெற்றிருந்தன. 

    இந்நிலையில், மீதமுள்ள 4 அணிகளுக்காக 8 அணிகள் மோதின. இந்நிலையில், தகுதிச்சுற்றில் விளையாடிய 8 அணிகளில் இருந்து, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து போன்ற அணிகள் தகுதிப்பெற்றன. இந்த பன்னிரண்டு அணிகள் இரு குழுவாக பிரிக்கப்பட்டு சூப்பர்-12 சுற்றுகள் தொடங்கின. 

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டம்; மீண்டும் டாப் 10 க்குள் நுழைந்த விராட்!

    இந்நிலையில், இருபது ஓவர் உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் தென்னாப்பிரிக்காவும் வங்கதேசமும் இன்று மோதின. இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. 

    இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா பேட்டர் ரூசோவ் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 52 பந்துகளில் சதமடித்து, தொடரின் முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். ஒட்டுமொத்த இருபது ஓவர் உலகக் கோப்பையின் 10-வது சதம் இதுவாகும். 

    தொடர்ந்து 19-வது ஓவரில் 109 ரன்கள் எடுத்திருந்தபோது ரூசோவ் ஆட்டமிழந்தார். அதேபோல், தொடக்க ஆட்டக்காரர் டி காக் 38 பந்துகளில் 63 ரன்கள் எடுத்துள்ளார். 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை தென்னாப்பிரிக்கா அணி குவித்தது. இதைத்தொடர்ந்து, வங்கதேச அணி மாபெரும் இலக்கை நோக்கி களமிறங்க, 101 ரன்களுக்கே ஆல்-அவுட் ஆகி தென்னாப்பிரிக்க அணியிடம் 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....