Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதிடீர் ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியா கேப்டன்...இதனால்தான் இந்த முடிவா?

    திடீர் ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலியா கேப்டன்…இதனால்தான் இந்த முடிவா?

    ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்சிற்கு தற்போது 35 வயதாகிறது. இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 2011 முதல் 5 டெஸ்டுகள், 145 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

    இந்நிலையில், இவர் தான் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த வருடம் 13 ஆட்டங்களில் விளையாடி 1 அரை சதத்துடன் 169 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ஃபிஞ்ச். கடந்த 12 இன்னிங்ஸில் 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார். கடைசி 7 இன்னிங்ஸில் 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

    ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இத்தொடரில் 2-0 என முன்னிலை பெற்று ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்துடன் ஆரோன் ஃபிஞ்ச் ஓய்வுபெறுகிறார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....