புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய கொரோனா தொற்று பாதிப்பு 4,272 ஆக இருந்த நிலையில், இன்று சற்று குறைந்து 3,947 ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (செப்டம்பர் 30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 3,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும் .
இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,87,307 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,629 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,40,19,095 பேர் குணமடைந்துள்ளனர்.
காலை 9 மணி வரை நாடு முழுவதும் இதுவரை 2,18,52,16,710 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு