Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு"சிங்கம் சிங்கிளாதான் வரும் " உதாரணமாக நம்ம ஊர் விவசாயி எடுத்த முடிவு

    “சிங்கம் சிங்கிளாதான் வரும் ” உதாரணமாக நம்ம ஊர் விவசாயி எடுத்த முடிவு

    திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே சட்டவிரோதமாக இயங்கிவரும் கற்குவாரியை மூடக்கோரி விவசாயி ஒருவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை இன்று (ஆகஸ்ட்-30) தொடங்கியுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கோடங்கி பாளையம் கந்தையக்காட்டைச்  சேர்ந்தவர், விவசாயி விஜயகுமார். இவர் தனது தோட்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளார்.

    இது குறித்து விவசாயி விஜயகுமார் கூறியதாவது:

    எங்களது தோட்டத்துக்கு அருகில் தனியாருக்குச் சொந்தமான கற்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியானது கனிமவளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளையும், நிபந்தனைகளையும் மீறி சட்டவிரோதமாக இயங்கி வருகிறது.

    இதுதொடர்பாக பலவேறு முறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இந்த கற்குவாரிக்கு புதியதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    இதனால், விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் கற்குவாரிக்காக அனுமதியை ரத்து செய்து குவாரியை மூடும் வரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளேன் 

    இவ்வாறாக அவர் கூறினார். 

    கூகுள் மேப் பார்த்தபடி சென்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பம் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....