Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சூடுபிடிக்கும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்; சசிதரூருக்கு எதிராக களமிறங்கும் மல்லிகார்ஜுன கார்கே!

    சூடுபிடிக்கும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்; சசிதரூருக்கு எதிராக களமிறங்கும் மல்லிகார்ஜுன கார்கே!

    காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் உள்ள நிலையில் திக் விஜய் சிங் போட்டியிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் இதுவரை சசிதரூர், திக் விஜய் சிங் ஆகியோர் வேட்பு மனுவை பெற்றுள்ளனர். முதலில் போட்டியிடுவதாக அறிவித்த ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் உட்கட்சி பிரச்சனையால் பின்வாங்கினார். இந்த சூழலில் தற்போது மல்லிகார்ஜுன கார்கேயும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜூனா கார்கே 1972 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 2009 ஆம் ஆண்டு மக்கள் அவை தேர்தலில் வெற்றி பெற்று, மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் அமைச்சராக பதவி வகித்தார்.

    தொடர்ந்து அவர், 2013 ஆம் ஆண்டு ரயில்வே துறை அமைச்சராக பணியாற்றினார். மேலும், 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக பதவியில் இருந்தார். அதோடு, 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், இவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால்  காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது தலித் தலைவராக இருப்பார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், இவர் அதிக செல்வாக்கு மிக்க தலைவர் என்பதால் மல்லிகார்ஜூனா கார்கே வெற்றி பெற அதிகம் வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

    23 பேர் கொண்ட அதிருப்தியாளர்கள் அணியை சேர்ந்த முகுல் வாஸ்னிக்கும் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நட்பார்ந்த போட்டி இருக்கும் என சசிதரூர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க : இளைஞர்களை போதைக்கு அடிமையாக்குவதுதான் திராவிட மாடலா? அன்புமணி குற்றச்சாட்டு

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....