Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் மருத்துவ இயக்குனரக அதிகாரிகள் விசாரணை

    சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் மருத்துவ இயக்குனரக அதிகாரிகள் விசாரணை

    மருத்துவம் தொடர்பாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்ததாக சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் மருத்துவ இயக்குனரக அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

    சித்த மருத்துவரான ஷர்மிகா இணையத்தில் மிகவும் பிரபலமானவர். இவரின் மருத்துவ குறிப்புகள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக ஷர்மிகா மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தன. 

    இதனிடையே, சித்த மருத்துவரான ஷர்மிகா குலாப்ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும் என்றும், குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் என்றும், கர்பம் மற்றும் உடல் எடை குறைப்பு போன்ற சில சர்ச்சையான கருத்துகளை ஆலோசனையாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகா வெளியிட்ட கருத்துகள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியது. 

    அந்தப் புகாரின் பேரில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க மருத்துவர் ஷர்மிகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் இருக்கும் இந்திய மருத்துவ இயக்குனரகத்தில் நேற்று சித்த மருத்துவர் ஷர்மிகா நேரில் ஆஜரானார். 

    இந்திய மருத்துவ இயக்குனர் எஸ்.கணேஷ் தலைமையில் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதிகாரிகள் அவரிடம் சர்ச்சை கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பினர். புகார் நகல்களும் அவரிடம் அளிக்கப்பட்டன. புகார்களை படித்து பார்த்த ஷர்மிகா, சில விளக்கங்களை அளித்தார். அதனை அதிகாரிகள் குழு பதிவு செய்து கொண்டனர். 

    மேலும் அவரது விளக்கங்களை வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, இந்திய மருத்துவர் இயக்குனர் எஸ்.கணேஷ், மருத்துவர் ஷர்மிகா மீதான புகார் தொடர்பாக அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்திருப்பதாகவும், இருப்பினும் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 

    மேலும் ஷர்மிகா அவரது தரப்பு விளக்கத்தை அளித்த பின்பு, அதனை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.கணேஷ் தெரிவித்தார். 

    நியூசிலாந்தை ‘வொயிட் வாஷ்’ செய்த இந்தியா..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....