Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்'எதையும் வாங்காதீர்கள்..பணத்தை சேமியுங்கள்' - அறிவுரை கூறிய உலக பணக்காரர்...

    ‘எதையும் வாங்காதீர்கள்..பணத்தை சேமியுங்கள்’ – அறிவுரை கூறிய உலக பணக்காரர்…

    அமெரிக்கா, வரும் மாதங்களில் பொருளாதார வீழ்ச்சியை காண உள்ளதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

    58 வயதான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். சில காலம் உலகின் நம்பர்-1 பணக்காரர் என்ற அந்தஸ்திலும் சில காலம் ஜெஃப் பெசோஸ் இருந்தார். 

    சமீபத்தில், ஜெஃப் பெசோஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், அமெரிக்க நிறுவனர் பணவீக்கத்துடன் போராடும் அமெரிக்கர்கள், வரும் மாதங்களில் நாடு பொருளாதார வீழ்ச்சியைக் காணக்கூடும் என்பதால் ஆடம்பர பொருட்களை வாங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். 

    குறிப்பாக, ‘நீங்கள் ஒரு பெரிய டிவி, வாகனம், குளிர்சாதனப்பெட்டி போன்ற எந்த பொருளை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தாலும், அதனை தள்ளிப்போடுங்கள். அந்தப் பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், என்ன நடக்கிறது என்று பாருங்கள். எப்போது வேண்டுமானாலும் பிரச்சினை தலைதூக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார். 

    முன்னதாக, அமேசான் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    ‘எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது’ – சர்ச்சைக்கு மம்மூட்டி பதில்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....