Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் எவ்வளவு தெரியுமா?

    நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் எவ்வளவு தெரியுமா?

    நாட்டில் 17 சதவீத பெண்கள் மட்டுமே பணிக்கு செல்வதாக ஆய்வறிக்கைகள் வெளிவந்துள்ளது. 

    இதுகுறித்து அவ்தார் குழுமத்தின் நிறுவனரும் சமூக முனைவருமான சௌந்தர்யா ராஜேஷ் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது, பெண்கள் பணியிடங்களில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் ஆகியவை தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகளை அவ்தார் குழுமம் மேற்கொண்டு வருகிறது. 

    இதையும் படிங்க:வங்கி வேலைதான் வேண்டும்னு விடாப்பிடியா இருக்கீங்களா…இதோ உங்களுக்கான வாய்ப்பு!

    எங்களது இந்த குழுமம் சார்பில் இந்திய நிறுவனகளின் நுழைவு நிலையில் பெண்களின் பங்கேற்பு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தோம். இதில் 351 நிறுவனங்கள் பங்கேற்றன. அந்த நிறுவனங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு, மேம்பாடு, பிரச்னைகள் குறித்து ஏழு முக்கிய பிரிவுகளில் பல கேள்விகள் இடம்பெற்றிருந்தன. 

    ஐ.டி. துறையில் பெண்களின் பங்களிப்பு 35 சதவீதமாக உள்ளது. அதேபோல் காப்பீடு, ஃபார்மா, வங்கி உற்பத்தி துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு 3 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    இருப்பினும் ஒட்டுமொத்தமாக கணக்கிடும்போது 17 சதவீதம்  பெண்கள் மட்டுமே தற்போது பணியாற்றுகின்றனர். அதே சமயம் ஆண்களின் சதவீதம் 65-க்கும் மேலாக உள்ளது. மேற்கத்திய நாடுகளில் 42 முதல் 50 சதவீதம் பெண்கள் பணிக்கு செல்கின்றனர். 

    பெண்களுக்கான பாதுகாப்பு, மேம்பாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்வதன் மூலம் இந்த எண்ணிக்கை இந்தியாவிலும் உயரும். 

    இவ்வாறு, அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: தேஜா வூ.. ஜமாய் வூ..இது மாயசக்தியா இல்லை எதிர்காலத்தை கணிக்கும் திறனா..?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....