Sunday, March 17, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைசிங்கார சென்னையின் வரலாறு தெரியுமா? - சிறப்பு பார்வை

    சிங்கார சென்னையின் வரலாறு தெரியுமா? – சிறப்பு பார்வை

    “சிங்கார சென்னை” என்று நம் தமிழ் மக்களின் பெருமையாக விளங்கும் சென்னை மாநகரம் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.

    மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சென்னையாக மாறியதற்கு பின், ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறப்படுகிறது. நாட்டின் முக்கிய நகரமான சென்னை, பொருளாதாரத்திலும் சமூக அளவிலும் மிக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.

    சென்னை பெருநகரமாக உருவெடுக்க காரணம்:

    மற்ற முக்கிய நகரங்களைக் காட்டிலும் சென்னையின் வளர்ச்சி தனித்துவமானது ஆகும். ஏனெனில், சென்னை நகரத்திற்கு பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னை நான்காவது மிகப்பெரிய நகரமாக உருவெடுத்துள்ளது.

    உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை மெரினா, ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு, வரலாற்று சிறப்புமிக்க ரிப்பன் மாளிகை, தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம் ஆகிய பல சிறப்புகளை கொண்டுள்ள பெருநகரம் என்றால் அது சென்னை தான்.

    இந்த காலகட்டத்தில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சென்னை முந்தய காலத்தில் பெரிய நகரம் கிடையாது. பசுமையான ஓர் அழகிய கிராமம் தான். 17-ம் நூற்றாண்டு காலத்தில் கிழக்கு இந்திய கம்பெனி சென்னையை விலைக்கு வாங்கியது முதல் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற ஆரம்பித்தது. ஏராளமான நிறுவனங்கள், ஷாப்பிங் இடங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி என மாற்றங்களைக் கொண்டு வந்தனர். எனவேதான் அது பெரிய நகரமாக உருவெடுத்தது. சென்னைக்கு பல பழம் பெருமைகள் உண்டு.

    நாட்டின் முதல் நகராட்சி சென்னை:

    1688-ம் ஆண்டு, அன்றிருந்த மதராஸ் நகரை முதல் நகராட்சியாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் அறிவித்தார். அதிலிருந்து, சென்னைதான் நாட்டின் முதல் நகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு, ராபர்ட் கிளைவ் தன்னுடைய ராணுவத் தளமாக அன்றைய மதராஸ் நகரைத் தேர்வு செய்தார்.

    பிரிட்டிஷ் அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் நான்கு மாகாணங்களில் ஒன்றாக மதராஸ் மாறியது. அன்று முதல், ‘மதராஸ் மாகாணம்’ என்று அழைக்கப்பட்டது. அவ்வளவு ஏன், தற்போதைய கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பல ஊர்களும், மதராஸ் மாகாணத்திற்குள் உள்ள இடமாக ஒரு காலத்தில் இருந்தன.

    சென்னை தின கொண்டாட்டம்:

    1939-ம் ஆண்டு, ஆகஸ்ட் 22-ம் தேதி, சென்னை நகரம் முறைப்படி உருவாக்கப்பட்டதாக கருதி, இந்த நாளையே நகரின் பிறந்த நாளாக மாற்றியுள்ளார்கள். சென்னை பாரம்பரிய அறக்கட்டளையால் 2004-ம் ஆண்டு ‘மெட்ராஸ் டே’ கொண்டாட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாக மெட்ராஸ் தேர்வு செய்யப்பட்டது.

    சென்னையாக மாறிய மெட்ராஸ்:

    மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போதுதான் மெட்ராஸ், தமிழ்நாடாக மாறியது. ஆம், 1969-ம் ஆண்டு தான் ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும், மெட்ராஸ் என்பதுதான் பலருக்கும் பரீட்சையமாக இருந்தது.

    1996-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி, அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு, மெட்ராஸ் என்கிற பெயரை மாற்றி, சென்னை என்ற பெயரை அதிகாரப்பூர்வ பெயராக மாற்றியது. அதன் பிறகு தான், மெட்ராஸ் என்கிற சொல்லின் புழக்கம் குறையத் தொடங்கியது என்றாலும், சென்னையின் பெருமையைக் கொண்டாடும் வகையிலும், பழைமையை நினைவுகூரும் வகையிலும் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி, ‘மெட்ராஸ் டே’ என்கிற தினம் கொண்டாடப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் தினத்தின் போது, பல்வேறு நிகழ்ச்சிகளைத் தமிழக அரசு ஏற்பாடு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இந்த ஆண்டும் ‘மெட்ராஸ்’ தினத்தைக் கொண்டாடும் விதமாகப் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், பெசன்ட் நகர் கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த கொண்டாட்டத்திற்கு “நம்ம சென்னை, நம்ம பெருமை” என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருக்கும் மக்களில் பலர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான். அப்படி வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னையின் 383-வது பிறந்தநாள் இன்று.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....