Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தனுஷின் 'வாத்தி' வசூலில் தேர்ந்ததா? இல்லையா?

    தனுஷின் ‘வாத்தி’ வசூலில் தேர்ந்ததா? இல்லையா?

    நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வாத்தி’ படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும்  ரூ.47 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 17-ஆம் தேதி வெளிவந்த படம் வாத்தி. தெலுங்கு திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில்,   சம்யுக்தா மேனன் நாயகியாகவும், சமுத்திரக்கனி வில்லனாகவும்  நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    கல்வியும் வியாபரமும் என்ற கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. 

    இந்நிலையில், வாத்தி படத்தில் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, வாத்தி வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.47 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், தெலுங்கனா மற்றும் ஆந்திராவில் மட்டும் வாத்தி ரூ.16 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    தனுஷ் தற்போது ராக்கி, சாணிக்காயிதம் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பேசவந்ததை பேசியதா ‘வாத்தி’? தனுஷ் இதை நிறுத்துவாரா? – வாத்தி திரைவிமர்சனம்!

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி; யாரெல்லாம் இந்திய அணியில்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....