Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தகனம் செய்யப்பட்டது, நடிகர் மயில்சாமியின் உடல்

    தகனம் செய்யப்பட்டது, நடிகர் மயில்சாமியின் உடல்

    பிரபல நடிகர் மயில்சாமி உடல் சாலிகிராமத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வடபழனி ஏ.வி.எம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தவர், நடிகர் மயில்சாமி. இவர் கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகா சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடு திரும்பிய போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

    இதைத்தொடர்ந்து, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என மயில்சாமியின் உடலுக்கு 2ஆவது நாளாக இன்றும் அஞ்சலி செலுத்தினர். 

    குறிப்பாக, இன்று காலை மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், மயில்சாமியின் கடைசி ஆசை நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார்.

    இந்நிலையல் மயில்சாமி உடல் சாலிகிராமத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வடபழனி ஏ.வி.எம் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்குகளில் ஏராளமான திரையுலகினர், பொதுமக்கள் பங்கேற்றனர். 

    5000 ஆண்டுகள் பழமையான ஹோட்டல் கண்டுபிடிப்பு

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....