Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இளைஞரணி செயலாளர் பதவி பெரிய பொறுப்பு! நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின்

    இளைஞரணி செயலாளர் பதவி பெரிய பொறுப்பு! நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின்

    இளைஞரணி செயலாளர் பொறுப்பு மீண்டும் அளிக்கப்பட்டுள்ளதை மிக பெரிய பொறுப்பாக பார்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில், சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு பயணாளிகளுக்கு மறுகுடியமர்வு செய்வதற்கான கருணைத் தொகையை வழங்கினர்.

    பின்னர் விழாவில் உரையாற்றிய சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,

    சேப்பாக்கம் திருவில்லிக்கேணி தொகுதி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் மேற்கொள்ளும் அனைத்து பணிகளுக்கும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னுரிமை அளிக்கிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் பழமையான நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தோம். அதன்படி தற்போது குடியிருப்புகள் கட்டித்தரப்படுகிறது. அதன்படி கொய்யாத்தோப்பு பகுதிகளில் ஏற்கனெவே பணிகள் தொடங்கப்பட்டு விட்டது, தற்போது நாவலர் நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கான ஆட்சி. கடந்த 1.5 ஆண்டுகளாக மக்களுக்கு தேவையானதை முதல்வர் பார்த்து, பார்த்து செய்து வருகிறார். முதலமைச்சர் வழியில் மக்களுக்கு உழைக்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் த.மோ.அன்பரசன்,

    திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதலமைச்சர் உத்தரவின் பேரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆய்வு மேற்கொண்டோம் என்றும் சென்னையில் 27 ஆயிரம் வீடுகள் மோசமனா நிலையில் உள்ளதாக புதிதாக வீடுகள் கட்டும் பணி தொடங்கப்படவுள்ளது. மறுகுடியமர்வு அதிமுக ஆட்சி காலத்தில் 8 ஆயிரம் ரூபாய்தான் வழங்கப்பட்டது, திமுக ஆட்சி பொறுப்பேற்று மக்களின் பொருளாதார நிலை கருதி 24 ஆயிரம் ரூபாயாக முதலமைச்சர் உத்தரவிட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் தரமில்லாமல் வீடுகள் கட்டப்பட்டது, திமுக ஆட்சியில் தரத்துடன் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.கட்டப்பட்டு வரும் வீடுகளில் ஐ ஐ டி, அண்ணா பல்கலைக்கழக பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு 3 மாதத்திற்கு ஒரு முறை அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து வருகின்றனர். நாட்டு மக்களின் நல்வாழ்வே லட்சியம் என்பதை நினைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24 மணி நேரமும் உழைத்து வருகிறார்.

    அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

    இளைஞரணி செயலாளர் பொறுப்பு மீண்டும் அளிக்கப்பட்டுள்ளதை மிக பெரிய பொறுப்பாக பார்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை ‘, முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க 5000 பணியாளர்கள் போராட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....