Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தொடர்ந்து திமுகவிலிருந்து விலகி வரும் உறுப்பினர்கள் - கட்சியின் நடவடிக்கை என்ன ??

    தொடர்ந்து திமுகவிலிருந்து விலகி வரும் உறுப்பினர்கள் – கட்சியின் நடவடிக்கை என்ன ??

     

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக  உறுப்பினர்களான  தொண்டர்களே சில இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

    vote

    வருகின்ற 19-ம் தேதி நடைபெறவிருக்கின்றது. சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணிகள் அமைத்த காங்கிரஸ், விசிக,மதிமுக போன்ற கட்சிகளுடன்  ஏற்பட்ட கூட்டணிகளையே,  திமுக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்ந்து வருகிறது.dmk இதில் கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்கவில்லை என கூட்டணி கட்சிகளே  அரசல் புரசலாக திமுக மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இன்னும் சில இடங்களில் திமுக தொண்டர்களே கழகத்தின் மீது புகார்களை தெரிவித்து வருகின்றனர். கட்சிக்காக பல்லாண்டு காலமாக அடிமட்டத்திலிருந்து பணியாற்றியவர்களை ஒதுக்கி புதிதாக வரும் நபர்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் இடஒதுக்கீடு ஏற்படுத்தியுள்ளதாக கட்சி மேலிடம் மேல் கோபங்கொண்டுள்ளனர்.  இதனால் கட்சிக்குள்ளேயே  குழப்பம் நீடித்து வருகிறது.

    dmk

    இதனிடையே சில இடங்களில் திமுக உறுப்பினர்களே,  திமுக வையும் அதன் கூட்டணி கட்சிகளையும் எதிர்த்து தனித்து போட்டி இடுகின்றனர். கட்சிகளுக்கும் இருக்கும் பலரும் தனித்து போட்டியிடுபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அந்த தொகுதிகளில் தொண்டாற்றவும், வாக்கு சேகரிக்கவும்  யாரும் முன்வருவதில்லை. அந்த தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி வாய்ப்புகளை இழக்க நேரிடவும் அபாயம் உள்ளதால் கட்சி மேலிடம் கலக்கமடைந்துள்ளது. 

    கட்சி பிளவுபட்டிருப்பதாக மக்களிடையே பேசப்பட்டு வரும் நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திமுக கட்சியிலிருந்து 56 பேரை தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

    durai murugan

    மேலும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுவதால்,  கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....