Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உக்ரைனை தாக்கவிருக்கும் ரஷ்யா - ஆதரவளிக்கிறார் ஜோ பைடன்

    உக்ரைனை தாக்கவிருக்கும் ரஷ்யா – ஆதரவளிக்கிறார் ஜோ பைடன்

    உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகள் தீவிர பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.இதனால் எந்நேரமும் உக்ரைனில் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா  ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஜோ பைடன் பேசி வருகிறார்.

    உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. மேலும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வருகின்றது. தற்போதைய நிலவரப்படி 10லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும், போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், உக்ரைன் மீது எந்த நேரமும் ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

    war

     இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவை கடுமையாக எச்சரித்துள்ளார்.சோவியத் ஒன்றியம் உடைந்த பின்பு விடுதலை பெற்று தனி நாடான உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்ரமித்தது. உக்ரைனை நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் சேர்க்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்தாண்டு உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்தது. இதனால், ரஷ்யா – உக்ரைன் எல்லையில் அதிகரித்து வந்த போர் பதற்றத்தை போக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

    joe biden puthin

    இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை குவிப்பு குறித்து பைடன் கவலை தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுவரை கண்டிராத பொருளாதார தடைகளை ரஷ்யா பார்க்க நேரிடும். joe biden  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க வரும் என்றும், மோசமான பொருளாதார சரிவுகள் ஏற்படுத்துவோம் என்று பகிரங்கமாக ரஷ்யாவுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த எங்கள் கூட்டாளிகள் தயாராக உள்ளனர். உக்ரைனை தாக்கினால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும உறுதியான பதிலடி கொடுக்கும் என்றும் ஜோ பைடன்  எச்சரித்துள்ளார்.  உக்ரைனுக்கு நம்பத் தகுந்த தோழனாக அமெரிக்கா இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

     

     

     

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....