Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்முட்டிக்கொள்ளும் திமுக மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி; விருந்து புறக்கணிப்பும்! கல்வெட்டு பிரச்சினையும்!

    முட்டிக்கொள்ளும் திமுக மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி; விருந்து புறக்கணிப்பும்! கல்வெட்டு பிரச்சினையும்!

    தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசுக்கும், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பலவித கருத்து மோதல்கள் இருந்து வருகின்றது. இந்நிலையில், பாரதியாரின் சிலை திறப்பு விழாவில் இருந்த கல்வெட்டால் புது பிரச்சினை வெடித்துள்ளது. 

    தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்று ஒரு வருடம் கூட இன்னும் நிறைவடையாத நிலையில், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. நீட் தேர்வு ரத்து, தேசிய கல்விக்கொள்கை மற்றும்  இந்தித்திணிப்பு என பலவகையில் இரு தரப்புக்கும் இடையே கடும் கருத்துவேறுபாடுகள் இருந்து வருகின்றன.

    ஒவ்வொரு தமிழ்புத்தாண்டு அன்றும் ஆளுநர் அவருடைய மாளிகையில் தேநீர் விருந்து கொடுப்பது வழக்கம். அதேபோல இந்த தமிழ் புத்தாண்டுக்கும் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதில் அனைத்து கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால், தி.மு.க கட்சி இந்த விருந்தை புறக்கணித்தது. மேலும், திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்தன. 

    தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களை மதிப்பதில்லை. நீட் தேர்வு ரத்து குறித்து இரண்டு மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. அது 8 கோடி தேர்தெடுக்கப்பட்ட மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு எடுத்த முடிவு. இரண்டு முறை நீட் மசோதாவை எதிர்த்து தீர்மானம் அனுப்பியும் ஆளுநர் அதனை ஏற்க மறுத்து வருகிறார். இவ்வாறு தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் ஆளுநரின் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது திமுக. 

    இந்நிலையில் நேற்று தமிழக ஆளுநர் மாளிகையில் மகாகவி பாரதியாரின் முழுஉருவச் சிலை ஆளுநர் ஆர்.என்.ரவியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மத்திய இணை அமைச்சர் டாகடர் எல். முருகன் கலந்து கொண்டார். அப்பொழுது, அங்கு இருந்த கல்வெட்டில் சிலையை திறந்து வைப்பவர் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று இருந்தது. 

    மேலும், முன்னிலை வகிப்பவர் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், அவர் விழாவில் கலந்து கொள்ளவே இல்லை. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், முதல்வருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், தேநீர் விருந்து நடக்கும் அதே நாளில் விழாவும் நடைபெறுவதால் விழாவில் மட்டும் கலந்து கொள்வது சரியாக இருக்காது என்பதால், இவ்விழாவில் கலந்து கொள்வதை புறக்கணித்து விட்டார் என்று திமுகவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    நாளுக்கு நாள், தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் கருத்துமோதல் பெரிதாகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில், ஆளுநர் தீர்மானங்களை படித்து பதில் சொல்லும் கால அவகாசம் 2 மாதங்கள் என்று சமீபத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....