Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் தொடரும் துயரச் சம்பவங்கள்; ஒரே நாளில் மூன்றுக்கும் மேற்பட்ட கொடூர விபத்துகள்…

    தமிழகத்தில் தொடரும் துயரச் சம்பவங்கள்; ஒரே நாளில் மூன்றுக்கும் மேற்பட்ட கொடூர விபத்துகள்…

    காரும் லாரியும் எதிர் எதிரே மோதிக் கொண்டதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. டாடா காரில் க ஏழு பேர் குடும்பமா திருவண்ணாமலையில் உள்ள சிங்காரப்பேட்டையில் நிகழவிருக்கும் உறவினரின் திருமண நிகழ்விற்கு சென்றுக் கொண்டிருந்தார்கள். அப்போது கார் கிரிவலப்பாதையில் வரும் செங்கம் பிரியும் சாலையில் எதிரே வந்த ஈச்சர் லாரி காரின் மீது மோதியது. 

    இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுனரும் உடன் இருந்த பெண்ணும் இறந்ததனர். மேலும் ஐந்து பேர் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இது குறித்து திருவண்ணாமலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி ஓட்டுநர் தப்பி சென்றதால் அவர் மீது காவல் துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் லாரி ஓட்டுனரை விசாரிக்க அவரை தேடி வருகின்றனர். 

    இதே போல் நேற்று விழுப்புரம் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடுத்த மூன்று மணி நேரம் கழித்து மீண்டும் அரசு பேருந்து மற்றும் கார் குறுக்கே மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் தொடர் விபத்துகள் நிகழ்வது வழக்கமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் காரின் டயர் வெடித்து இரண்டு பேர் பலியாகி உள்ளனர். இதில் சார் ஆட்சியர் ராஜாமணி மற்றும் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

    இதையும் படிங்க; கனடா நாட்டை மிரட்டிவரும் ஜாம்பி நோய்! மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளதா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....