Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ்

    ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ்

    விமான போக்குவரத்து ஆணையரகம் (DCGA) ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

    கடந்த மே 4ம் தேதி சென்னை முதல் துர்காபூர் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், வானில் பறந்துகொண்டிருந்த போது ஆயில் ஃபில்டர் பிரச்சனைக் காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது.

    இதே மே 28ந் தேதி மும்பை முதல் கோரக்பூர் சென்ற விமானம், 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

    இதேபோல் ஜூன் மாதத்தில் இரு முறையும், ஜூலை மாதத்தில் 3 முறையும் விமானம் பறந்தபோது தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது. அதிலும், தில்லியில் இருந்து துபாய் செல்லும் SG 11 விமானம் கராச்சியில், எரிபொருள் இண்டிகேட்டர் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

    ஆனால், தரையிறக்கத்தின் போது, அவசர நிலை என்பதை குறிப்பிடாதது தெரியவந்துள்ளதால், அப்பொழுது பயணிகள் இடையே பதற்றம் நிலவியுள்ளது. மேலும், அந்த விமானத்தில் 150 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சமீப காலமாக தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்படது. கடந்த 18 நாட்களில் 8 சம்பவங்கள் ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் நிகழ்ந்துள்ளது.

    இந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு, விமான போக்குவரத்து ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அதில், ஸ்பைஸ்ஜெட் விமானம் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதுகாப்பின்றி மீண்டும் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது எனவும் மேலும், ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி விமான போக்குவரத்து ஆணையரகம் தரப்பில், மோசமான பாதுகாப்பு மேற்பார்வை மற்றும் போதிய பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததே விமானத்தில் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இதுமட்டுமல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2018-19ம் ஆண்டு ரூ. 316 கோடியும், 2019-20ம் ஆண்டு ரூ. 934 கோடியும், 2020-21 ஆண்டு ரூ. 998 கோடியும் இழப்பைச் சந்தித்துள்ளது.

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2020ம் ஆண்டிலிருந்து இன்டிகோநிறுவனம் மட்டுமே லாபத்தில் இயங்குகிறது.

    ரஷ்யா உக்ரைன் போருக்குப்பின் விமான எரிபொருள் விலை உயர்வால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானம் அடுத்தடுத்து பாதுகாப்பு குறைபாடு சம்பவங்களில் சிக்கியதையடுத்து, அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 7 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....