Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாலீனா மணிமேகலையின் காளி ஆவணப்படம் திரும்பப் பெறப்பட்டது

    லீனா மணிமேகலையின் காளி ஆவணப்படம் திரும்பப் பெறப்பட்டது

    காளி ஆவணப்படம் திரையிடப்படுவதிலிருந்து நீக்கப்படுவதாக ஆகா கான் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

    இந்திய ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கத்தில் ‘காளி’ எனும் ஆவணப்படம் உருவாகியுள்ளது. 

    கனடாவில் உள்ள டொரண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம், மாணவர்கள் தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் ‘ஒரே குடையின் கீழ்’ என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டத்தின்படி, 18 ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த 18 ஆவணப்படங்களில் ஒன்றாக காளி திரைப்படமும் திரையிடப்பட்டது. 

    இந்த திரையீடலை அடுத்து, லீனா மணிமேகலை தனது காளி படத்தின் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அந்த போஸ்டரில், இந்துக்களின் கடவுளான காளி வேடத்துடன் ஒருவர் புகைப் பிடிப்பது போன்றும், ஒரு கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தியபடியும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சித்தரிப்பானது மாபெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரகம் நேற்று ‘ரிதம்ஸ் ஆஃப் கனடா’ என்ற நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் காளி ஆவணப்படத்தை திரும்ப பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

    இந்நிலையில், இதுகுறித்து ஆகா கான் அருங்காட்சியகத்தின் இணையதள பக்கத்தில் இன்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

    இதுதொடர்பாக ஆகா கான் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளதாவது :

     ‘’இந்து மற்றும் இதர இந்து மத நம்பிக்கை கொண்டவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்ததுக்கு மிகவும் வருந்துகிறோம். கலை மூலமாக கலாச்சார ஒருமைப்பாட்டை உருவாக்குவதே இந்த அருங்காட்சியகத்தின் நோக்கமாக இருந்தது. 

    பல்வேறு மதத்தின் நம்பிக்கைகளை மதிப்பது மற்றும் பல மத நம்பிக்கைக் கொண்ட சமுதாயத்தை ஒன்றிணைப்பது இதன் நோக்கமாகும். ஆகவே, இந்த ஆவணப்படம் இனி அருங்காட்சியகத்தில் திரையிடப்படாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    லீனா மணிமேகலை டொரண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மும்பையில் நிலச்சரிவு; மூன்று பேர் படுகாயம்!

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....