Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்9 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்ட்ட தாய் மற்றும் இரு குழந்தைகள் - துருக்கியில் நெகிழ்ச்சி!

    9 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்ட்ட தாய் மற்றும் இரு குழந்தைகள் – துருக்கியில் நெகிழ்ச்சி!

    துருக்கியில் 9 நாள்களுக்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து தாய் மற்றும் இரு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

    துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில், இந்த நிலநடுக்கத்திற்கு 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

    துருக்கியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மீட்பு பணிகளின் போது நிகழும் நிகழ்வுகள் மனதை உருக்குபவையாகவும், சோகத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. சில நேரங்களில் ஆறுதல் அளிக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. 

    அந்த வகையில், துருக்கியில் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கு இடையே 9 நாள்களுக்குப் பிறகு தாய் மற்றும் இரு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

    முன்னதாக, நிலநடுக்கம் ஏற்பட்டு 128 மணி நேர போராட்டத்துக்குப் பின்னரும் உயிருடன் இருந்த 2 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. சமீபத்தில் கூட 74 வயது மூதாட்டி ஒருவரும் அதன் தொடர்ச்சியாக 46 வயது பெண் ஒருவரும் மீட்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ட்ரீட்; வெளிவந்த பாடல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....