Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஜி-பே மூலமாக நூதன முறையில் மோசடி; தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

    ஜி-பே மூலமாக நூதன முறையில் மோசடி; தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

    ஜி-பே மூலமாக நூதன முறையில் மக்களிடம் மோசடி நடைபெறுவதால் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    வளர்ந்து வரும் தொழிநுட்ப உலகத்தில் பல வகையான பண மோசடிகள் நடைபெற்று வருகின்றன. நூதன முறையால் மக்களை ஏமாற்றி பணத்தை பறிக்கும் கும்பல்கள் பல உள்ளன. சிறிய வகையான திருட்டு முதல் பெரும் கொள்ளை சம்பவங்கள் இந்த தொழிநுட்ப வளர்ச்சியால் அதிகரித்து வருகின்றன. 

    அப்படி பல விதமான மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஜி-பே மூலம் மோசடி நடைபெறுவதாக தமிழ்நாடு காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது ஜி-பே-க்கு (Google Pay) பணத்தை அனுப்புகிறார். மேலும் பணத்தை உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் இருந்ததாக உங்களுக்குத் தெரிவிக்க உங்களை அழைக்கிறார். 

    அதனை தொடர்ந்து, பணத்தை அவர்களின் எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும்.

    எனவே, யாராவது உங்கள் கணக்கில் தவறாகப் பணம் பெற்றிருந்தால், அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். 

    இந்த மோசடி இப்போதுதான் தொடங்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது. மேலும் பொதுமக்கள் கவனத்தோடு கையாள வேண்டும். 

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள்

    • உங்கள் யுபிஐ பின்னை ஒருபோதும் தெரியாதவர்களுடன் பகிர்ந்து கொள்ள கூடாது.
    • தெரியாத ஐடிக்களில் வரும் மின்னஞ்சல்கள் மற்றும் லிங்குகளை திறக்க வேண்டாம்.
    • உங்கள் விவரங்களை உங்கள் வங்கியுடன் இணைக்க வேண்டும்.
    • நீங்கள் நம்பும் பாதுகாப்பான வைஃபை இணைப்புகளை மட்டும் பயன்படுத்துங்கள்
    • உங்கள் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கணக்கு அறிக்கைகளை கண்காணித்து, உங்கள் கணக்கில் சந்தேகத்திற்குரிய நடத்தை ஏதேனும் உள்ளதா எனக் கண்காணிக்கவும்.
    • அப்படி ஏதாவது அசாதாரணமான பரிவர்த்தனையைக் கண்டால் உடனடியாக வங்கி அல்லது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.

    ஓட்டுநர்களுக்கு ரூபாய் 1000 நிவாரணம் – வதந்தியா? உண்மையா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....