Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகடலூரில் வெள்ள பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு: நிவாரண உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

    கடலூரில் வெள்ள பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு: நிவாரண உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

    கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து வருகிறார்.

    வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெயர்த்து வருகிறது. 

    கடந்த வாரம் பெய்த அதி கனமழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பல பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 

    கடலூர் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீர் மூழ்கியுள்ளதாகவும், 208 கிராமங்களைச் சேர்ந்த 4,655 விவசாயிகள் பாதிக்கப்பிரிவுப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

    கடலூர் மாவட்டம், கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்ட 14 பேருக்கு முதல்வர் நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அங்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். 

    சிதம்பரம், வல்லம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளையும் முதல்வர் பார்வையிட்டு வருகிறார். 

    இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், “எதிர்கட்சிகள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். எனக்கு அதைபற்றி எல்லாம் கவலை இல்லை. மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். சில குறைகள் இருக்கு, அவற்றை விரைவில் சரி செய்வோம்” என தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க‘அவுங்க ஒரு தேவதை’ பிரியங்கா காந்தி உடனான சந்திப்பு குறித்து நளினி நெகிழ்ச்சி பேச்சு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....