Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவெற்றியின் மூலம் மீண்டும் கர்ஜிக்கத் தொடங்கிய சென்னை சிங்கங்கள்!

    வெற்றியின் மூலம் மீண்டும் கர்ஜிக்கத் தொடங்கிய சென்னை சிங்கங்கள்!

    இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் நவி மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டில் மைதானத்தில் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணியானது முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

    இதன்படி, முதலில் களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் உத்தப்பா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடர்ந்து சொதப்பி வரும், ருத்ராஜ் கெய்க்வாட் இப்போட்டியிலும் சொதப்பினார். ஆம்! 17 ரன்களுக்கு தன் விக்கெட்டை இழந்து வெளியேறினார், ருத்ராஜ்.

    இதன்பின் களமிறங்கிய மொயின் அலி எதிர்பாரா விதமாக ரன் அவுட் ஆக, இன்றையப் போட்டியிலும் தோல்விதான் என்ற எண்ணம் தொடர்ந்தது. இதன்பிறகு சிவம் துபே ஏற்கனவே களத்தில் இருந்த உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்தார். 

    இதன்பின்பு, இந்த ஜோடியானது, பெங்களூர் அணியின் பந்துவீச்சை சிதறடித்தது என்றே கூறலாம். இருவரும் நிதானத்துடன் கூடிய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உத்தப்பா 50 பந்துகளுக்கு 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தனது விக்கெட்டை ஹசரங்கா வீசிய 18 ஆவது ஓவரின் இறுதிபந்தில் இழந்தார். இதனால் அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடஜா டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். 

    இப்போட்டியின், சூழலில் இந்த டக் அவுட் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆம்! காரணம், சிவம் துபே மறுபுறம் அதிரடியாக விளையாடினார். 46 பந்துகளுக்கு 95 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

    அதன்படி, சென்னை அணி இருபது ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு, 216 ரன்கள் எடுத்தது. 

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அதன்படி, முதலில் களமிறங்கிய டூ பிளெசிஸ், அனுஜ் ராவட் போன்றோர் விக்கெட்டுகளை இழந்தார். கிளன் மெக்ஸ்வேல், ஷாபாஸ் அகமது முறையை 26 ரன்கள், 41 ரன்கள் எடுத்தனர். 

    அதன்பின் களமிறங்கிய சுயாஷ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலா 34 ரன்களை எடுத்தனர். ரன்கள் வந்துக்கொண்டிருப்பதைப் போல தோன்றினாலும், இலக்குக்கு தேவையான ரன் ரேட்கள் கிடைத்தபாடில்லை. 

    19 ஆவது ஓவரை வீசிய கிரிஸ் ஜோர்டன் மிகவும் சிறப்பாக வீசி 7 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இருபதாவது ஓவரில் வெறுமனே பன்னிரண்டு ரன்களை மட்டுமே பிராவோ விட்டு கொடுக்க, 20 ஓவருக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவினர், பெங்களூர் அணியினர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....