Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பீஸ்ட் எப்படி இருக்கு? மக்கள்,ரசிகர்களின் பார்வையில்…

    பீஸ்ட் எப்படி இருக்கு? மக்கள்,ரசிகர்களின் பார்வையில்…

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் படம் இன்று அதிகாலை உலக அளவில் பல்வேறு இடங்களில் வெளியானது. 

    தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கே, பல்வேறு திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. விஜய் ரசிகர்கள் கூட்டமாக கூடி ஆட்டம் பாட்டம் என கத்தி கூச்சலிட்ட பின்னரே திரையரங்கின் உள் சென்றனர். வழக்கம் போல் கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் வாசலில் குவிந்து மேள தாளத்துடன் ஆடினர். தளபதி விஜய்யின் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    ரசிகர்களின் கருத்துகள்: 

    • தளபதி விஜய்யின் நடிப்பு அருமையாக இருந்ததாக தெரிவித்தனர். 
    • அனிருத் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அருமையாகவும் விஜய்யின் நடனங்கள் பார்ப்பதற்கு கண்ணுக்கு விருந்தளித்ததாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். 
    • பலர், சில இடங்களில் திரைப்படம் பொறுமையாக சென்றுள்ளதாக தெரிவித்தனர். 
    • கதை இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் எனவும் நாங்கள் இன்னும் அதிகமாக எதிர்ப்பார்த்தோம் என்று ரசிகர்கள் கூறினர். 
    • சிலர், நெல்சன் இன்னும் கதையை தளபதி விஜய்யிற்கு ஏற்ற மாஸ் கொடுத்திருக்கலாம். 
    • பலர் இப்படத்தில், புது மாதிரியான தளபதி விஜய்யை ரசிகர்களுக்கு நெல்சன் அறிமுகம் செய்துள்ளார் எனவும் தெரிவித்தனர். 
    • கூர்கா படம் போல் இருக்கும் என்று சொன்னவர்கள் படம் பார்த்துவிட்டு பேச வேண்டும். அப்படி பட்ட கதை அல்ல என்றும், இது நெல்சன் அவரது அழகில் சிறப்பாக செய்துள்ளார் என்றும் சில ரசிகர்கள் தெரிவித்தனர். 
    • திரைக்கதையை சற்று விறுவிறுப்பாக எதிர்பார்த்தோம் ஆனால் அது சற்று குறைவு என்றும் ரசிகர்கள் தெரியப்படுத்தினர்.
    • மேலும் கண்ணுக்கு விருந்தளிக்கும் அருமையான காட்சிகள் அடுத்தடுத்து வந்தது சிறப்பாக இருந்தது என்று தெரிவித்தனர். குறிப்பாக ஒளிப்பதிவு நன்றாக இருந்தாக தெரிவித்தனர். 
    • டார்க் காமெடி சில இடங்களில் நன்றாக வந்ததாகவும் சில இடங்களில் பொருந்தாமல் போனதாகவும் ரசிகர்கள் கூறினர். 
    • சிலர் ஒரே செட் அமைப்பில் படத்தின் காட்சிகள் அதிகம் இருந்ததால் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாதகவும் கூறினர். 
    • சண்டைக் காட்சிகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருந்ததாகவும் அதற்கு ஏற்ற வகையில் பிஜிம் இருந்ததாகவும் தெரிவித்தனர். 
    • திரைக்கதையில் மிகவும் சிறப்பான வசனங்கள் தம்மை கவர்ந்ததாகவும் தெரிவித்தனர்.  
    • கதையில் அனைவரையும் எளிமையாக காட்டியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.  
    • மேலும் சிலர், விஜய்யிற்கு வயசாகியது என்று சொன்னவர்கள் இந்தப் படத்தை பாருங்கள். இவரின் நடனங்களும் சண்டை காட்சிகளும் எவ்வளவு அழகென்று என்று கூறினர். 
    • நேரம் சென்றதே தெரியவில்லை கதை அவ்வளவு வேகமாக சென்றது என்றும் குறிப்பிட்டனர். மேலும், நெல்சன் விஜய்யை சிறப்பாக காட்டியுள்ளார் எனவும் கூறினர். 

    இதையும் படியுங்கள்,

    ‘பாசமுள்ள பிள்ளைகளே….’ – பீஸ்ட் குறித்து பேசிய தளபதி விஜய்யின் தந்தை!

    பீஸ்ட், கேஜிஎஃப் மோதல்; கள நிலவரங்கள் என்ன? எப்படத்திற்கு பலம் அதிகம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....