Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதிருப்பதியில் குவியும் பக்தர்கள்; தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு

    திருப்பதியில் குவியும் பக்தர்கள்; தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு

    பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையார் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

    திருப்பதியில் உள்ள ஏழுமலையார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இயல்பாகவே, திருப்பதி ஏழுமலையானை காண கூட்டம் அதிகரிக்கும். 

    இந்நிலையில், இன்று வைகுண்ட கட்டிடத்தில் இருக்கும் 64 அறையிலும் நிரம்பி இலவச தரிசனத்திற்கு 3 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

    இதில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமானதால், அறைகள் கிடைக்காமல் பெருமளவு பக்தர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்கி வருகின்றனர். 

    அதேபோல், சிறப்பு கட்டண தரிசனத்திற்கு 5 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்கின்றனர். அதிக பக்தர்கள் கூட்டம் இருப்பதால் லட்டு தட்டுப்பாடு உள்ளது. பக்தர்களுக்கு இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. 

    மேலும், திருப்பதியில் கூட்டம் அதிகரித்ததால் விஐபி தரிசனங்கள் ரத்து செய்வதாக தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....