Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்வாடகை பணம் தராததால் அரசு அலுவலகங்கள் ஜப்தி! மாவட்ட நீதிமன்றம் உத்தவால் பரபரப்பு!

    வாடகை பணம் தராததால் அரசு அலுவலகங்கள் ஜப்தி! மாவட்ட நீதிமன்றம் உத்தவால் பரபரப்பு!

    புதுச்சேரியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட வாடகை வாகனங்களுக்கு ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் பாக்கி செலுத்தாததால் தலைமை தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புதுச்சேரியில் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலுக்காக தேர்தல் துறையானது 200 வாகனங்களை 2 டிராவல்ஸ் நிறுவனங்களிடம் இருந்து வாடகைக்கு எடுத்தனர். அந்த வாகனங்களை முழுமையாக தேர்தல்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு சென்று தேர்தல் பணிக்கு பயன்படுத்தியது. தேர்தல் முடிந்த பிறகு வாகனங்களுக்கான வாடகை தொகையை முழுமையாக செலுத்தவில்லை. பாதி தொகையை மட்டுமே கொடுத்த தேர்தல் துறையானது மீதமுள்ள தொகையை வழங்க பல நிபந்தனைகளை விதித்தது.

    குறிப்பாக ஓட்டுநர்கள் விவரம், அதில் பயணித்த அதிகாரிகள் கையொப்பம் என கேட்டது. அந்த விவரங்களை டிராவல்ஸ் நிறுவனத்தினர் தேர்தல்துறையிடம் சமர்ப்பித்தும் பாக்கித்தொகையை முழுமையாக தரவில்லை. ரூ.71 லட்சத்து 50 ஆயிரம் பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட டிராவல்ஸ் நிறுவனத்தினர் இது தொடர்பாக தேர்தல் அதிகாரி மற்றும் கவர்னர் மாளிகை வரை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதையடுத்து அந்த டிராவல்ஸ் நிறுவனத்தினர் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோர்ட்டு அமினா நேற்று அந்த அலுவலக கட்டிடங்களில் ஜப்தி நடவடிக்கைக்கான நோட்டீசை ஒட்டினார். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....