Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுரேசன் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஊழலா? தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை...

    ரேசன் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஊழலா? தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

    தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் இயங்கும் மூன்று தனியார் நிறுவனங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

    பொது விநியோக திட்டத்திற்கு உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் தனியார் நிறுவனமான அருணாச்சலம் இம்பக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Arunnachala impex private limited) என்ற நிறுவனம் தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு அதிக அளவு உணவு பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது. 

    இந்நிலையில் இன்று இந்த நிறுவனத்தின் மண்ணடி அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் காமாட்சி குரூப் ஆப் கம்பெனிஸ், இண்டெர்கிரேடட் சர்வீஸ் குரூப் ஆகிய நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 

    சென்னை, தண்டையார்ப்பேட்டையில் உள்ள காமாட்சி குரூப் ஆப் கம்பெனிஸ் உள்ளிட்ட பாமாயில், பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 

    புகார் அளிப்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்ககிறார் எடப்பாடி பழனிசாமி….

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....