Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபாதாள சாக்கடை பணியின் போது பரிதாபமாக போன உயிர் ! மதுரையை பதற வைத்த சம்பவம்

    பாதாள சாக்கடை பணியின் போது பரிதாபமாக போன உயிர் ! மதுரையை பதற வைத்த சம்பவம்

    மதுரை மாநகராட்சி  பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிந்ததில் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.

    மதுரை மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின் இதுவரை பாதாள சாக்கடை அமைக்கப்படாத இடங்களில், மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக, மதுரை கூடல் புதூர் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் மதுரை மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. 

    இந்தப் பணியில், நேற்று மூன்று ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.  இதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த கொத்துகாடு பகுதியை சேர்ந்த 36 வயதான சக்திவேல் என்பவர் உள்பட மூன்று பேர் ஈடுப்ட்டிருந்தனர். அப்போது, மேலே உள்ள மண் சரிந்து பணியில் ஈடுபட்டவர்கள் மேலே விழுந்தது. 

    இதையும் படிங்க:மோர்பி பால விபத்து; தாமாக முன்வந்து அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

    இச்சமயத்தில், மண் சரிவிலிருந்து இருவர் தப்பிய நிலையில் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற ஒப்பந்த தொழிலாளர் மண் சரிவில் சிக்கி பலியானார். இதைத்தொடர்ந்து, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தரப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர், அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று காலை 11.30 மணி முதல் நடைபெற தொடங்கிய மீட்பு பணியானது, மதியம் 3.30 வரை நீடித்தது. பின்பு, இறந்த நிலையில் சக்திவேல் மீட்கப்பட்டார். எம்.பி. சு.வெங்கடேசன், மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், காவல்துறை துணை ஆணையர் மோகன்ராஜ், துணை மேயர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணியை பார்வையிட்டனர். 

    உயிரிழந்த சக்திவேலுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....