Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநேற்று ஒருநாள் மட்டும் இத்தனை பேருக்கு கொரோனாவா? அலர்ட்டாகும் தமிழகம்!

    நேற்று ஒருநாள் மட்டும் இத்தனை பேருக்கு கொரோனாவா? அலர்ட்டாகும் தமிழகம்!

    இந்தியாவில் கொரோனா 3-வது அலை பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், மீண்டும் சில மாநிலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் தொற்று பாதிப்பு ஏற்றம் கண்டுள்ளது. மராட்டிய தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து இருப்பதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தொற்று பாதிப்பு விகிதம் 6 சதவீதத்தை தாண்டியிருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. இதையடுத்து, தொற்று பரவலை கண்டுபிடிக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பரிசோதனகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    12-18 வயது வரம்பில் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதையும் விரிவுபடுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. அறிகுறிகளுடன் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியிருப்பதால் மருத்துவமனைகள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொண்டு தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மும்பையில் நேற்று 506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுதான் ஆகும். மும்பையில் கடந்த பிபரவரி 6 ஆம் தேதி 536 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதிரடியாக அந்த எண்ணிக்கையை கடந்துள்ளது.

    நாட்டின் முக்கிய நகரங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், நாட்டில் 4-வது அலைதொற்று பரவலுக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்று பரவலாக நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து நேற்று தமிழகத்தில் 98 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 90 பேர் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் 14 லட்சத்திற்கு ஏலம்….

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....