Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவினாத்தாள் கேள்வியால் ஏற்பட்ட சர்ச்சை; விளக்கம் அளித்த கல்வித்துறை

    வினாத்தாள் கேள்வியால் ஏற்பட்ட சர்ச்சை; விளக்கம் அளித்த கல்வித்துறை

    நாடுகள் குறித்த கேள்வியில் காஷ்மீரின் பெயர் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    பீகார் மாநிலத்தில் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அம்மாநில கல்வித்துறை சார்பில் கடந்த 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இடைக்கால தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    அந்தக் கேள்வியில், பின்வரும் நாடுகளை சேர்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என கேட்கப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கேள்விக்கு உதரணமாக சீனாவைச் சேர்ந்த மக்கள் சீனர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என கொடுக்கப்பட்டிருந்தது. 

    இதைத் தொடர்ந்து, அந்தக் கேள்வியில், நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என கேட்டகப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், நாடுகள் குறித்த கேள்வியில் காஷ்மீரின் பெயர் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்தக் கேள்வித்தாள் பீகாரில் உள்ள அராரியா, கிஷான்கன்ச், கதிஹார் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில், இந்தக் கேள்வித்தாள் மாநில கல்வித்துறையிடம் இருந்து வந்ததாகவும், இது கவனக்குறைவால் ஏற்பட்ட பிழை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: கைவிடப்பட்ட ஆட்டம்…கவலையில் இந்திய ரசிகர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....