Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர் கோடை மழை; தக்காளி விலை வீழ்ச்சி! விவசாயிகள் வேதனை

    தொடர் கோடை மழை; தக்காளி விலை வீழ்ச்சி! விவசாயிகள் வேதனை

    திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கோடை மழை காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமான காய்கறி சந்தை ஆகும். இந்தச் சந்தை தக்காளிக்கு பெயர் போனது. இங்கு தக்காளிக்கு என சந்தை அமைக்கப்பட்டு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் கோடை மழை காரணமாக, தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 14 கிலோ அடங்கிய ஒரு பெட்டி 70 முதல் 100 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    அதே சமயம், தக்காளி எடுத்து வரும் கூலி அளவுக்கு கூட விற்பனை ஆகாத நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைத்துள்ளனர். 

    தொடர் கோடை மழை காரணமான தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

    வாட்சப்பில் புதிய அப்டேட்! – பயனர்கள் ஆச்சரியம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....