Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் தொடங்கியது

    காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் தொடங்கியது

    காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் இன்று  காலை 10 மணியளவில் தொடங்கியது. 

    நாட்டின் மிகப் பழமையான கட்சி என்ற பெருமைக்குரிய கட்சியாக காங்கிரஸ் திகழ்ந்து வருகிறது. அப்படிபட்ட கட்சியில் 6-வது முறையாக அக்கட்சிக்கான தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. 

    இந்தத் தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாரும் போட்டியிடவில்லை. இதனால், 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் குடும்பத்தைச் சேராத நபர் ஒருவர் இன்று நடைபெறுகிற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.

     காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான இந்தத் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

    இந்நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடங்கியது. இந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ப.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.  

    இதையும் படிங்க: சிபாரிசு செய்கிறேன்.. ஆளுநர் பதவி கொடுங்கள் எச்.ராஜாவுக்கு.. சீமான் பேச்சு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....